கடலூர், ஜுன் 5- கடலூர் பாரதி சாலையில் குடியிருப்பு களுக்கு இடையே வணிக வளாகம் (மால்) கட்டுவதற்காக 100 அடிக்கு மேல் பள்ளங் கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் பக்கத் தில் உள்ள சொர்கல்பட்டு பகுதியில் நிலத் தடி நீர் உப்பாக மாறி வருகிறது. மேலும் குடியிருப்புகளில் விரிசல் விழும் நிலை உள்ளது. சுற்றிலும் 50 ஆயிரம் பேர் படிக்கக்கூடிய கல்வி நிலையங்கள் உள்ளன. எனவே, இதுகுறித்து முறையாக ஆய்வு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர், கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் மனு அளிக்கப்பட்டது. இதில் 21ஆவது வார்டு முன்னாள் நகர மன்ற அதிமுக உறுப்பினர் ஆதிநாராய ணன், வார்டு பிரதிநிதி ராம்குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், நகர் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கீரான், சொர்கல் பட்டு பகுதியைச் சேர்ந்த பலராமன், ராம்குமார், ஜெகன், கணேசன், அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.