சாகித்ய அகாடமி விருதில் ஒன்றிய அரசு தலையிட்டு அதை நிறுத்திவைத்ததற்கு சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து; சாகித்ய அகாடமி அமைப்பையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கிறது மோடி ஆட்சி. பா.ஜ.க ஆட்சியில் இனி சாகித்ய அகாடமி விருது சனாதனத்தை ஆதரிப்பவர்களுக்கும், ஆட்சிக்கு 'ஜால்ரா' போடுபவர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும்.
இலக்கியம், வரலாறு, அதன் தரம் போன்றவை ஒரு பொருட்டல்ல! அனைத்தையும் அழிப்போம் என்பதுதான் அவர்களின் அரசியல். என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
