tamilnadu

img

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிபிஎம் பொருளுதவி

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு சிபிஎம் பொருளுதவி

திருத்துறைப்பூண்டி, ஜூலை 17-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரம் பள்ளங்கோவில் அருகே, புலியடி தெருவில் நான்கு வீடுகள் தீ விபத்தால் பாதிக்கப்பட்டன.  அதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் நேரில் வந்து பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை கட்டி தருவதற்கான உதவிகளை செய்தனர்.  அதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வியாழனன்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருள் உதவி செய்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி வழங்கி உதவினார். இன்னும் சில பொருட்கள் இரண்டு நாட்களில் வழங்குவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி கே பி ஜோதிபாசு ஒன்றியச் செயலாளர் டி.வி. காரல் மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேதையன், மதியழகன், கலைச்செல்வி, மூத்த தோழர் வைரக்கண்ணு ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.