tamilnadu

மு.க.ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

சென்னை, ஏப்.19-திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் வெள்ளியன்று (19.04.2019) மரி யாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் டி.கே.எஸ். இளங் கோவன், திருச்சி சிவா ஆகியோர் உடனி ருந்தனர்.இச்சந்திப்பிற்கு பின்னர் பத்திரிகையாளர் களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறிய தாவது:திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல் களையும் தெரிவித்தோம்.குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட கோவை, மதுரை தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்ததற்கு மாநிலசெயற்குழு சார்பில் நன்றியினைத் தெரி வித்துக் கொண்டோம். அதேபோல கோவை,மதுரை மக்களவைத் தொகுதியில் பணி யாற்றிய திமுக மாவட்ட நிர்வாகிகள், ஊழி யர்கள் அனைவருக்கும் நன்றியினையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தோம். இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் 2019 மே 19 அன்று நடை பெறும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவினை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது வெற்றிக்கு சிபிஐ(எம்) பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.