திருக்கோவிலூரிலிருந்து பழைய சித்தாமூர் வழியாக காடகனூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்துகள் நிறுத்தப் பட்டது. இந்த பேருந்துகளை மீண்டும் இயக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் நடத்திய காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். விழுப்புரம் மாவட்டம், திருக் கோவிலூரில் இருந்து சித்தாமூர் வழி யாக இயக்கப்பட்டு வந்த அரசு நகரப் பேருந்துகள் தடம் எண்கள் டி 11, டி 13, டி 22 ஆகிய பேருந்துகள் நிறுத்தப் பட்டது. மீண்டும் இயக்காமல் காலம் நடத்தி வந்தனர். இந்த நிலை யில், இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி மனம் பூண்டியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து திருக்கோவிலூர் பணிமனை முன்பு புதன்கிழமை (பிப்.19) சிபிஎம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் கே.வீரன், தலைமை தாங்கி னார். ஏ.ஜெய்சங்கர், ஏ.அருள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு சு.வேல்மாறன், வட்டச் செயலாளர் எஸ்.கணபதி ஆகி யோர் கோரிக்கையை வலி யுறுத்தி பேசினர். வி.உமா மகேஸ்வரி, ஏ.ஏழுமலை, எ.ஆர்.கே.தமிழ்ச்செல்வன், பி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் வந்த பேச்சுவார்த்தை நடத்தும் வரைக்கும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, கண்டாச்சி புரம் வட்டாட்சியர், திருக்கோவிலூர் பணிமனை கிளை மேலாளர், அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலைகளை ஆய்வு செய்து அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரிடம் அனுமதி பெற்று ஒரு வாரத்திற்குள் மீண்டும் பேருந்துகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைத்து கலைந்து சென்றனர்.