tamilnadu

img

கொரோனா: தொழிலாளி குடும்பத்திற்கு செங்கொடி சங்கம் நிதியுதவி

சென்னை, ஜூலை 12 - கொரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு சென்னை மாநக ராட்சி செங்ககொடி சங்கம் 63 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் அலுவ லர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள துப்பு ரவு தொழிலாளர்கள் என 1000 பேருக்கு  மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி உண்மை தகவல்களை வெளியிடாமல் உள்ளது. மேலும், மாநகராட்சி ஊழியர்க ளுக்கு கொரோனா பரிசோதனை செய்யக் கூடாது என நிர்வாகம் வாய்மொழி உத்த ரவு பிறப்பித்துள்ளது. முன்கள தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டால் அரசு வழங்குவதாக அறிவித்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாய், நிவார ணத் தொகை 50 லட்சம் ரூபாய் ஆகியவற்றை யும் மாநகராட்சி பெற்றுத்தராமல் உள்ளது. இந்நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட 9  தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இவர்களில்  மண்டலம் 9, பகுதி 27, கோட்டம் 116ல் உயிரி ழந்த ஜே. நந்தகுமார் (என்யுஎல்எம் - மலேரியா  பணியாளர்) குடும்பத்திற்கு சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்கத்தின் சார்பில் ஊழி யர்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி 63 ஆயிரத்து  240 ரூபாபாய் வசூலிக்கப்பட்டது.  நிதியை யும், ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்  களையும் சங்கத்தின் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், நந்தகுமாரின் மனைவியிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.சீனிவாசுலு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.