tamilnadu

img

கொரோனா பீதியும் உண்மையும்

உலக மக்களை அச்சத்தில் வைத்துள்ள கொரோனா நோய்த்தொற்றில் இருந்து  பொதுமக்களை காப்பாற்ற ஒட்டுமொத்த  அரசு நிர்வாகமும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தற்போது சுமார் 17  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர். இதில் 75 விழுக்காட்டினர் சென்னை  மற்றும் புறநகர்பகுதிகளை சேர்ந்தவர்கள்.  இதில்  35விழுக்காட்டினர் குணமாகிவிட்டதாகவும் 118 பேர்  உயிரிழந்த்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. நோய்த்தொற்று பரவலை தடுக்க  தமிழ்நாடு  அரசு பலஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளதாக  கூறப்பட்டாலும் இது போதாது என்ற மனநிலையே  மக்களிடம் காணப்படுகிறது.

பொய்த்துபோன நம்பிக்கைகள்

உப்புக்காற்று, வெயில், கடுமையாக உடல்  உழைப்பு இவற்றின் காரணமாக இந்நோய் பரவாது  என்ற அதீதநம்பிக்கை கொண்டிருந்த வடசென்னை  மக்கள் தற்போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வடசென்னையில் நோய் பரிசோத னைகள் மிகத்தாமதமாகவே நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராயபுரம் மண்டலம், திருவிகநகர், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, மாதவரம், திருவொற்றியூர், அம்பத்தூர்  உள்ளிட்ட வடசென்னைகுட்பட்ட 5 மண்டலங்களில் நோய் பரவிவருகிறது. குறிப்பாக ஒருகட்டத்தில் சென்னை ஜி.எச், ஸ்டான்லி, கேஎம்சி ஆகிய மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிக்க முடியாத அளவிற்கு எண்ணிக்கை கூடியது. நோய் தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு போதிய வசதிகள் செய்துத்தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களின் பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது.

சென்னை முழுவதும் துப்புரவு தொழிலாளர்கள்  கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகிவருகின்ற னர். மருத்துவர்களின் தியாகத்திற்கு சற்றும் குறை வில்லாமல் பணியாற்றும் அவர்களுக்கு மக்கள்  மத்தியில் நல்ல செல்வாக்கு பெருகியுள்ளது.  ஆனால் அவர்களின் பணிநிரந்தரக்கோரிக் கையை அரசு நிர்வாகம் இன்னும் செவிசாய்ப்பதாக  தெரியவில்லை. நிரந்தர தொழிலாளி செத்தால் ஒரு தொகை ஒப்பந்த தொழிலாளி செத்தால் ஒரு  தொகை என அரசே பாகுபாடு பார்க்கிறது. வடசென்னையில் மக்கள் நெருக்கமாக வாழ்ந்து பழகிவிட்டதே தற்போது நோய்பரவலுக்கு  காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைஎளிய மக்கள், குடிசைமாற்று வாரியகுடியிருப்பு, சாலை யோரம் வசிக்கும் வீடற்ற மக்கள், குடிசைபகுதி யினர் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கே போரா டும் நிலையில் அவர்களால் சமூக இடைவெளியை  பின்பற்றுவது சிரமமாக உள்ளது. குறுகிய மற்றும் நெருக்கமான வீடுகள் இருப்ப தால் இந்நோய் தொற்று வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு உத்தரவால்  மக்கள்  வீட்டுக்குள்ளேயே மக்கள் கூட்டம் கூட்டமாக சேர்ந்து  விளையாடுவதில் பொழுதை கழித்து வருகின்ற னர். கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் ஒரே நேரத்தில் காய்கறி, மீன் சந்தை,  இறைச்சி சந்தைகளில் ஒன்று கூடி பொருட்களை வாங்க முற்படுவதும் சமூக இடைவெளி குறைவ தற்கும் காரணமாகிறது.

ஏழைகள், தொழிலாளர்கள் நிறைந்த வட சென்னையை அரசு நிர்வாகம் தொடர்ந்து புறக் கணித்துவருவதாக கூறப்படுகிறது. கொரானா தாக்கத்தின் ஆரம்பகட்டத்தில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் அந்த நோயாளி வாழ்ந்த தெருவை முற்றாக அடைத்துவிடுவதும், வீட்டினுள் இருப்பவர்களுக்கு பொருளாதாரத்தேவை மற்றும்  உணவுத்தேவைகள் குறித்து பெரிய அளவு கவலைப்படுவதில்லை. இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. அதே போல் புலம்  பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை கவலைக்கிட மாக மாறியதை வார்த்தையில் சொல்லி மாளாது.  வடமாநிலத்தொழிலாளர்கள் தங்கள் அன்றாடத் தேவைக்காகவும் தங்கள் சொந்த ஊர் செல்ல பட்ட  கஷ்டங்கள் ஏராளம், காவல்துறையினர் அள்ளும் பகலும் பொது வெளியில் நின்று அரசின் ஊடரங்கு உத்தரவு சட்டத்தை பாதுகாக்க கடுமையாக உழைத்ததை மறுக்க இயலாது. ஆனால் ஒரு பகுதி காவல்துறை யினரின் காட்டுமிராண்டித்தன நடவடிக்கையால் பொதுமக்கள் அதிருப்தியை ஏற்படுத்தின. அரசியல் கட்சியினர், தன்னார்வுதொண்டு  நிறுவன பிரதிநிதிகள் பொதுமக்களிடையே கொரானா நோய் தொற்று குறித்து  விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகின்றனர். இதையொட்டி மக்கள் மத்தியில் சோப்பு போட்டு கைகழுவுதல், முகக்கவ சம் அணிதல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.

அரசியல் கட்சிகள்

அரசின் நடவடிக்கையின் நிறைகளை பாராட்டி யும்,  குறைகளை விமர்சினம் செய்துகொண்டே திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிட்கட்சி, சிபிஐ, விசிக,  காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மக்கள்  நலனுக்காக தொடர்ந்து தொண்டாற்றி வருகின் றன. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் , தங்கள் கட்சியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களை அடையாளம் கண்டு உதவி  செய்யும் நடவடிக்கைகள் வேகமாக நடந்துவரு கிறது. சமூக இடைவெளி, தூய்மையான வாழ்க்கை முறையே நோயை கட்டுப்படுத்தும் என்பதை பொது மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும் என சமூக  ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதோடு நோய் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும். பொது மக்களும் அரசு நிர்வாகமும் இணைந்து செயல் பட்டால் கோரோனா தொற்றை சென்னை மாநக ரில் இருந்து முற்றிலும் ஒழித்துவிடலாம்.

-ம.மீ.ஜாபர்