tamilnadu

img

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று... 

சென்னை 
தமிழகத்தில் ஜெட் வேகத்தில் பயணித்து வரும் கொரோனா பெருந்தொற்றால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த ஒருவாரமாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் வித்தியாசமான வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,13,273 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (ஞாயிறு) ஒரே நாளில் 85 பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,471 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,526 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 53,703 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   
மேலும் இன்றைய கொரோனா பாதிப்பில் 75 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் (வெளிநாடு, வெளிமாநிலம்) இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பரிசோதனை விபரங்கள்:

அறிகுறியுடன் வந்தவை  - 64,129. இதுவரை மொத்தம் - 23,51,463

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது  - 62,305. இதுவரை மொத்தம் - 22,68,738 

பரிசோதனை மையங்கள்  - 116 (நேற்று 115)