சென்னை
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது மாநிலத்தின் தலைநகர் மண்டலமான சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மந்தமான வேகத்தில் இருந்தது. அதாவது ஆயிரத்துக்குள் இருந்தது.
இந்நிலையில் 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை மண்டல கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,14,260 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4,703 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்கள்...
திருவள்ளூர் - 495
செங்கல்பட்டு - 437
கோவை - 385
தேனி - 365
காஞ்சிபுரம் - 315
கடலூர் - 219
சேலம் - 191
ராணிப்பேட்டை - 178
வேலூர் - 177
புதுக்கோட்டை - 155
திண்டுக்கல் - 138
ஈரோடு - 128
கன்னியாகுமரி - 128
விழுப்புரம் - 127
நெல்லை - 117
திருச்சி - 106
மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது.