tamilnadu

img

புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலை அமைவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலை அமைவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுச்சேரியில் மதுபான தொழிற்சாலை அமைவதை காங்கிரஸ் எதிர்ப்பதாக காங்கிரஸ் தலைவர் வைத்திய லிங்கம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வெ.வைத்திலிங்கம்  எம்.பி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலை அமைப்பதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ரெஸ்டோபார்களால் அரசுக்கு எந்த வருவாயும் கிடையாது. மக்கள் தொகை அடிப்படையில் ரெஸ்டோ பார்களை வழங்கியுள்ளோம் என கூறியுள்ள முதலமைச்சர், அதன் மூலம் கிடைத்த வருவாய் என்ன? என தெரியப்படுத்த வேண்டும். ரெஸ்டோபார்களில் போலியான மதுபானங்களை விற்கின்றனர். கிஸ்தி கட்டிய மதுபானங்கள் அங்கு விற்கப்படுவதில்லை. இதை கண்காணிக்கும் அமைப்பு புதுவை அரசிடம் இல்லை. அதையும் தாண்டி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றாலும், ரெஸ்டோ பார்கள் அனுமதிப்பதில்லை. புதுச்சேரியிலி தற்போது இயங்கி வரும் மது ஆலை களும், மதுக்கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால், வருவாய் கிடைக்கும். இதன் மூலம் நிதி நெருக்கடியும் தீரும். ஏற்கெனவே தற்போது புதுவையில் இயங்கும் 5 மது ஆலைகளில் 500 பேர் கூட வேலையில் இல்லை. புதிய மது ஆலை களால் 5 ஆயிரம் பேருக்கு எப்படி வேலை கிடைக்கும் என வைத்திலிங்கம்  கேள்வி எழுப்பினார்.