tamilnadu

img

மாதர் சங்கத்தினருக்கு பாராட்டு விழா

உளுந்தூர்பேட்டை, டிச. 23- போதையற்ற, வன்முறையற்ற தமிழகம் என்று கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற பெண் தோழர்களுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டு  விழா ஞாயிறன்று (டிச. 22) உளுந்தூர் பேட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலை மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில  செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்  கட்ராமன் கலந்து கொண்டு நடைபய ணத்தில் பங்கேற்ற பெண்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்  பினர் வி.பிரமிளா, மாவட்டச் செயலாளர் இ.அலமேலு, தலைவர் ஏ.தேவி ஆகியோர் நடைபயண அனுபவங்களை பகிர்ந்தனர். கட்சியின் நகரச் செயலாளர் கே.தங்கராசு நன்றி கூறினார்.