tamilnadu

img

விவசாயிகள் சங்க தலைவர் அரசம்பட்டு தோழர் எம்.சின்னப்பா காலமானார்.... மார்க்சிஸ்ட் கட்சி-விவசாயிகள் சங்கம் இரங்கல்..

சென்னை:
ஆலய நுழைவுப்போராட்டம் நடத்தி, மக்களின் நன்மதிப்பை பெற்றதமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அரசம்பட்டு தோழர் எம்.சின்னப்பா ஜனவரி 1 அன்று காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, அரசம்பட்டு கிராமத்தைச்சேர்ந்த தோழர் எம். சின்னப்பா அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 1ஆம் தேதியன்று இரவு சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார் என் பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.தோழர் எம். சின்னப்பா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது மாணவர் சங்கத்துடன் அறிமுகம் ஏற்பட்டு சங்கத்தில் செயல்பட ஆரம்பித்தவர். தோழர் வி.பி.சிந்தன் அவர்களால்ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.சென்னையில் படிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பிய அவர் இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். குறிப்பாக, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தையும் கட்டுவதற்கு அரும்பாடுபட்டவர். கல்வராயன் மலைவாழ் மக் களை திரட்டியதிலும் குறிப்பிடத்தக்க பணியாற்றியவர். ஒன்றுபட்ட தென் னாற்காடு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும், மாவட்டம் பிரிந்த பிறகு விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள், கரும்பு விவசாயிகள் ஆகியோரை திரட்டி அவர்களின் நலன்களுக்காக பல்வேறு இயக்கங்களை நடத்தியவர். தற்போது இம்மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம் பலமான அமைப்பாக இருப்பதற்கு இவரின் பங்கு மகத்தானது. அதேபோல, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அவர் வசிக்கும் ஊர் அருகில் உள்ளகொசப்பாடி என்ற கிராமத்தில் தலித் மக்களை திரட்டி ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி, மக்களின் நன் மதிப்பை பெற்று இக்கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாககட்டியவர்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உருவாவதற்கு இவருடையபங்கு முக்கியமானது. அச்சங்கத்தின்தலைவர், துணை நிர்வாகி, பொருளாளர் என பல பொறுப்புகளை வகித்தவர்.தற்போது கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இயக்குநராக இருந்தார். மாணவர்-இளைஞர் அமைப்பு கள், கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம்ஆகியவற்றின் பல்வேறு போராட்டங் களை தலைமையேற்று நடத்தியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.தோழர் சின்னப்பா மறைவால் துயருற்றுள்ள அவரது மனைவி தோழர்கண்ணகி அவர்களுக்கும், மகள்களான சுபா, சுதா, அம்பிகா, காயத்திரிமற்றும் உறவினர்களுக்கும், தோழர் களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. 

விவசாயிகள் சங்கம் 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலதுணைத்தலைவர் ,தமிழ்நாடு கரும்புவிவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் தோழர். எம். சின்னப்பா அவர்கள் ஜனவரி 1 அன்று இரவு மரணமடைந்தார். ஒன்றுபட்ட கடலூர் மாவட் டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் விவசாயிகள் சங் கத்தின் தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர். கல்வராயன் மலையில் ஆதிவாசி மக்களை திரட்டுவதிலும் அம்மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்திலும் தோழர் பாஷாஜான் அவர்களோடு இணைந்து தீவிரமாக செயல்பட்டவர். மாநிலம் முழுவதும் கரும்பு விவசாயிகளை திரட்டுவதில் முன்னணியில் செயல்பட்டவர். அவருடைய மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.