பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதி வரை 'தமிழ் வார விழா' கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்களும், கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளது. அதேபோல், பள்ளிகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. தமிழில் சிறந்து விளங்கும் இளம் கவிஞருக்கு ‘பாரதிதாசன் இளம் படைப்பாளர்’ விருதும் வழங்கப்பட உள்ளது.