அம்பத்தூர், டிச. 10- அம்பத்தூர் அடுத்த ஆவடியில் உள்ள டியூப் பிராடாக்ட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்க தேர்தல் நடை பெற்றது. இதில் டியூப் பிராடாக்ட்ஸ் எம்ளாயிஸ் யூனியன் சார்பில் போட்டியிட்ட சிஐடியுவைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றனர். தலைவராக எஸ். கே.மகேந்திரன், பொருளாளராக துரைசாமி, துணைத் தலைவராக பாஸ்கர், துணைச் செய லாளராக கருணாநிதி, இணைச் செயலாளராக இளஞ்செழி யன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து 4ஆவது முறையாக எஸ்.கே.மகேந்திரன் தலைவராக வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.