tamilnadu

சென்னை ,ஆவடி முக்கிய செய்திகள்

மயிலாப்பூரில் நகை-பணம் கொள்ளை

சென்னை,ஜூலை 14 மயிலாப்பூரில் ஜன்னலை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்தவர் சொக்க லிங்கம். இவர் சொந்த ஊரான செய்யூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சொக்கலிங்கம் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சொக்க லிங்கத்துக்கு தெரிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா? இல்லை அவர் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்களா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

திருமுல்லைவாயலில்  பொறியாளர் வீட்டில் 80 சவரன் கொள்ளை

ஆவடி, ஜூலை 14 திருமுல்லைவாயலில் பொறியாளர் வீட்டில் 80 சவரன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமுல்லைவாயில் கமலம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் பெங்களூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.விடுமுறையையொட்டி தட்சிணாமூர்த்தி திருமுல்லைவாயலுக்கு வந்தார். அவர் குடும்பத்தோடு தி.நகர் கடை வீதிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 80 சவரன் நகை, ரூ. 75 ஆயிரம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளைய டிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.