நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழையும், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆகஸ்டு 15,16 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 17 ஆம் நாள் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்டு 18 ஆம் தேதி தமிழகம்,புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு நாட்களில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.