சென்னை,டிச.24- மத்திய அரசு தொழிலாளர் நலச்சட்ட ங்களை திருத்துவதைக் கண்டித்தும், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 21 ஆயிரம் நிர்ணயிக்க கோரியும் வரும் ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தம் நடை பெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), மேற்கு கிளை சார்பில் மதுரவாயல், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் வேன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், மேற்கு கிளைச் செயலா ளர் தசரதன், கணேஷ்ராவ், முனியாண்டி, பி.எஸ்.பார்த்தசாரதி, ராஜேந்திரன் ( தொமுச), வெங்கடேசன் (கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்), சவரிமுத்து (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), லோகேஸ்வரன் (ஜனதா தொழிற்சங்கம்), அண்ணாதுரை (தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.