இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், புதுச்சேரி விடுதலைப் போராட்ட தலைவருமான வ.சுப்பை யாவின் 110 வது பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு சிக்னலில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம், நிர்வா கக்குழு உறுப்பினர்கள் விசுவநாதன், நாரா.கலைநாதன், சிபிஎம் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி,பிரபுராஜ், உழவர்கரை நகரச் செயலாளர் நடராஜன், சிஐடியு நிர்வாகிகள் முருகன், குணசேக ரன், ராமலிங்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மாலை அணிவித்தும், மலர்தூவியும் மறியாதை செலுத்தினர்.