சென்னை, ஜூலை, 19- சென்னையில் மேலும் தளர்வுகளுக்கு தயாராக இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை யில் சனிக்கிழமையன்று (ஜூஐல 18) இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: சென்னையில் பரிசோதனைகளை அதி கப்படுத்தியால் நல்ல பலன் கிடைத்துள்ளது.நாளொன்றுக்கு 12 ஆயிரத்து 500 முதல் 13 ஆயிரம் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. இதுவரை 5 லட்சம் பிசிஆர் பரி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவி லேயே 5 லட்சம் பரிசோதனைகளை கடந்த முதல் மாநகராட்சி சென்னைதான். 18 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப் பட்டதில் 11 லட்சம் பேர் பயனடைந்துள்ள னர். இந்த முகாம்கள் மூலம் சுமார் 60 ஆயி ரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் 8.5 லட்சம் பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் இருந்துள்ளனர்.
களப்பணியில் மட்டும் 350 மருத்து வர்கள் உள்ளனர். பரிசோதனைகளுக்கு 200 கோடி ரூபாய், களப்பணியாளர்களின் உணவுக்கு 30 கோடி ரூபாய், பேருந்துகளுக்கு 14 கோடி ரூபாய் என சுமார் 400 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது. முக்கவசம், சமூக இடைவெளி என்ற மந்தி ரத்தை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் தொடர் நடவடிக்கையால் தொற்று அளவு இம்மாத இறுதியில் 8 சதவீதமாக குறையும். சென்னை யில் தொற்று எண்ணிக்கை இரு மடங்காக உயர 47 நாட்கள் ஆகிறது. சென்னையில் தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் தொற்று இரு மடங்காக உயர 90 நாட்கள் கூட ஆகிறது. தற்போது சென்னையில் சில தளர்வுகள் உள்ளது, பொருளாதாரம் வளர்ச்சியடைய வும், மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் மேலும் தளர்வுகள் தேவை. எனவே சென்னை யில் தளர்வுகளுக்கு மாநகராட்சி தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.