tamilnadu

img

நடப்பாண்டில் 50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க பரோடா வங்கி இலக்கு

சென்னை, செப். 30 - நடப்பாண்டில் 50 லட்சம் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ண யித்துள்ளதாக பரோடா வங்கியின் சென்னை மண்டல பொதுமேலாளர் ஆர்.எஸ். ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் திங்களன்று (செப்.30)  செய்தி யாளர்களிடம் பேசியஅவர், கடந்தாண்டு 25லட்சம் விவசாயிகளுக்கு பல்வேறு கடன்களை வழங்கியதாக கூறினார்.ரூ.5லட்சம் வரை கடன் வாங்கி  பல ஆண்டுகளாக திருப்பி செலுத்தாத விவசாயிகள் உடனே கடனை திருப்பி செலுத்தினால் வட்டிச்ச லுகை தள்ளுபடி கிடைக்கும். மேலும் புதிய கடனை உடனே பெறமுடியும். சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட் கடன்க ளுக்கு முன்னுரிமை அளிப்ப தாகவும் இந்த கடனுக்கு மத்தியஅரசு 50 விழுக்காடு மானியம்  அளிக்கப்படுகிறது. எங்களது வாடிக்கையாளர்க ளில் பாதிபேர் விவசாயிகள் ஆவர். இந்தாண்டு 50 லட்சம் இலக்கை தாண்டுவோம். இந்தாண்டு எல்லா மாநிலங்களிலும் விவசாயம் சிறப்பாக இருப்பதால் இந்த கடன்கள் விவசாயிகளுக்கு நன்கு பயன்படும். 10 ஆண்டுகளாக அடுத்த வர் நிலத்தில் குத்தகை செய்யும் விவசாயிகளுக்கும் கடன் வழங்குகிறோம். நகைக்கடனுக்கு 7 விழுக்காடு வட்டி என்றாலும் அரசு 4 விழுக்காடு மானியம் வழங்குகிறது.அவர்கள் கட்டவேண்டியது வெறும் 3விழுக்காடு வட்டிதான்.  உழவர் இருவார திருவிழா பரோடா வங்கியின் சார்பில் உழவர் இருவார திருவிழா கொண்டாட்டம் அக்.1 ஆம் தேதி முதல்  15 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. நாடு முழுவ தும் எங்களது வங்கி கிளைகளில் கொண்டாட ப்படும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும். நாடு முழுவதும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உணவு உற்பத்தியில் சுய இலக்கை அடைதல். விவசாயிகளின் வேளாண்மை மற்றும் அதனு டன் தொடர்புடைய நடவ டிக்கைகளுக்காக வழங்கப்படும் கடன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பாரம்பரிய நடைமுறைகளைத் தவிர பல்வேறு சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்குத் தெரிவித்தல், விவசாயம், வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு அரசு அதிகாரிகளுடன் விவசாயி களை இணைத்தல் உள்ளிட்டவை இந்த விழாவின் நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வங்கியின் மண்டல துணை மேலாளர் ஏ.கே.சிங், துணைப்பொதுமேலாளர் பி.பெரியகுமார், விவ சாயப்பிரிவு தலைமை மேலாளர் பாலசுப்பிரமணி யன் ஆகியோர் உடனிருந்த னர்.