tamilnadu

img

பாலக்கோட்டில் அரசு மகளிர் கல்லூரி அமைக்கப்படும்

தருமபுரி, ஏப்.6-பாலக்கோட்டில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக மருத்துவர் எஸ.செந்தில்குமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் சனியன்று பாலக்கோடு வட்டத்தில் உள்ள கிராமங்களில் தீவிரவாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், நான்உள்ளூர் மக்களின் பிரச்சனைகளை அறிந்தவன். மாவட்டத்தின் அடிப்படை பிரச்சனையானகுடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். பாலக்காடு வட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தும்பல அள்ளி அணைக்கு – தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே – என்னேகொள்புதூர் என்ற இடத்தில் அமைய உள்ள புறக்கால்வாய்த் திட்டம் மீண்டும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலக்கோட்டில் அரசு மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துபெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெறசெய்யவேண்டும் என கிராமமக்களைகேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் குட்டி, பி.கே.முருகன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கடாச்சலம், நகர செயலாளர் பி.கே.முரளி, சந்திரசேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஷ்குமார், காங்கிரஸ் கட்சிநிர்வாகிகள் ஜனகராஜ், கோவிந்தராஜ், சித்தையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் ஜி.நக்கீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இப்பிரச்சாரம் கொவிலூரான்கொட்டாயில் துவங்கிய கரகத அள்ளி, வீட்டு வசதிவாரியம், கடமடை, மேக்கலாம்பட்டி, கக்கன்ஜிபுரம், மூங்கில்பட்டி, தளவாய் அள்ளிபுதூர், பி.கொல்ல அள்ளி, கூட்டுறவு சர்க்கரை ஆலை செங்கொடப்பட்டி, மாரண்ட அள்ளி, பி.செட்டிப்பட்டி, கொலசனஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டனர். வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்திஎடுத்து மேளதாளத்துடன் வரவேற்றனர்.மாதர் சங்கம் வாக்குசேகரிப்புஇதேபோல், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி நகரம் குமரன்மேஸ்திரி காலனி, இந்திராநகர், இபிகாலனி ஆகிய இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணை தலைவர் கே.பூபதி, நிர்வாகிகள் கே.சுசிலா, நிர்மலாராணி, கல்பனா, மாது மற்றும் சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் டி.ஏசுதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, ஏழைகளுக்கு வீட்டு மனைபட்டா கிடைக்கவும், நீண்ட காலம் வீடுகட்டி குடியிருபோருக்கு மனைபட்டா, அனைத்துகிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும், 60 வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும், கேஸ் விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை குறைக்கவும், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பெற தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனபிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டனர்.


மாதர் சங்கம் வாக்குசேகரிப்பு


இதேபோல், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி நகரம் குமரன்மேஸ்திரி காலனி, இந்திராநகர், இபிகாலனி ஆகிய இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணை தலைவர் கே.பூபதி, நிர்வாகிகள் கே.சுசிலா, நிர்மலாராணி, கல்பனா, மாது மற்றும் சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் டி.ஏசுதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, ஏழைகளுக்கு வீட்டு மனைபட்டா கிடைக்கவும், நீண்ட காலம் வீடுகட்டி குடியிருபோருக்கு மனைபட்டா, அனைத்துகிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும், 60 வயதானவர்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும், கேஸ் விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை குறைக்கவும், பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பெற தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனபிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டனர்.