பால பிரஜாபதி அடிகளார் மனைவி ரமணிபாய் மறைவிற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "அய்யா பால பிரஜாபதி அடிகளார் மனைவி ரமணிபாய் நேற்று (02.12.2024) உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடித்து மக்கள் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தைப் பேணி காக்கும் போராட்டத்தில் அயராது ஈடுபட்டு வரும் அய்யா பால பிரஜாபதி அடிகளாரின் சமூக சேவைக்கு உற்றத்துணையாக இருந்தவர் ரமணி பாய் அவர்கள்.
அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, துணைவியாரை இழந்து தவிக்கும் அய்யா பால பிரஜாபதி அடிகளார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.