tamilnadu

முதுகலை ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஓதுக்கீடு

சென்னை,  ஜூன் 21- 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழு வதுமுள்ள அரசுப்பள்ளிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் காலியாக  இருந்த 3456 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான தகுதித்  தேர்வு  நடத்த விதிமுறைகளை  வகுத்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.  அந்த அறிவிக்கையில், 40 முதல்  70 விழுக்காடு ஊனமுள்ள மாற்றுத்திற னாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த விதி, 70 விழுக்காட்டுக்கும் அதிகமுள்ள கடும் ஊனமுற்ற மாற்றுத்  திறனாளிகளை பாதிக்கும் விதத்தில்  சட்ட விரோதமாக வகுக்கப்பட்டு இருந்  தது. மேலும் ஊனமுற்றோர் உரிமை கள் சட்டம் 2016-ன்படி 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக பழைய 3 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.    மாற்றுத்திறனாளிகளுக்கு எதி ரான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த சட்ட விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்  தின் சார்பில் 2017ல் வழக்கு தொடரப்  பட்டது. இந்த வழக்கை முதலில் ஏற்று விசா ரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதி பதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர்  ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த  தீர்ப்பில், மொத்தமுள்ள 3456 பணி யிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 4 விழுக்காடு இடத்தை  அதாவது சுமார் 140 பணியிடங்களை  ஒதுக்கிவிட்டு மீதமுள்ள பொது இடங் களை அரசு நிரப்பிக்கொள்ளலாம்.   அதில் இடஒதுக்கீடு முறை பின்பற் றப்பட வேண்டும் என்று கூறப்பட்டி ருந்தது.

இந்த வழக்கு 2017 டிசம்பர் மாதம்  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவ ஞானம்,   ரவிசந்திரபாபு ஆகியோர்   அடங்கிய    டிவிஷன் பெஞ்ச்,   சங்கம்    வைத்தகோரிக்கை ஏற்கப்படுகிறது என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டைப் பின்பற்றி 6 மாதங்களுக்குள் புதிய அறி விப்பை வெளியிட்டு அந்த பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தனர். ஆனால், 6 மாதங்களுக்கு மேல் கடந்த பின்னரும்,  உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி முதுகலை பட்டதாரி ஆசி ரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதித் தேர்வு நடத்தா மல், பல காரணங்களைக் கூறி ஆசி ரியர் தேர்வு வாரியம் இழுத்தடித்து வந்தது.  இதனையடித்து நமது சங்கத்  தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 2018 ஆம் ஆண்டு தொடரப் பட்டது. இந்த வழக்கில் இரண்டாண்டு கள் இழுத்தடிப்புக்குப் பிறகு, பல்வேறு பாடப் பிரிவுகளில் முது கலைப்பட்டதாரி ஆசிரியர் பணி நிய மனங்களில் மாற்றுத்திறனாளி களிகளுக்குரிய 134 பின்னடைவு காலி  பணியிடங்கள், வேறு பிரிவினருக் கான 336 பின்னடைவு காலிப்பணி யிடங்கள் மற்றும் தற்போது காலியாக உள்ள 1,657 இடங்களையும்   சேர்த்து மொத்தமாக 2144 பணியிடங்களை நிரப்ப ஜூன் 12 தேதியிட்டு  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறி விப்பினை வெளியிட்டுள்ளது.  இதனை தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம்  வரவேற்பதாக அதன் தலைவர் பா. ஜான்சிராணி, பொதுச் செயலாளர் நம்புராஜன் ஆகியோர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

புதிய அறிவிக்கை
சங்கம் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூன் 14 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி பதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும்  வி.பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பாக  விசாரணைக்கு வந்தபோது, ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜ ரான அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்டுள்ள புதிய அறி விக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை யடுத்து இரண்டாண்டுகளாக தமிழ்  நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் கடும் ஊன முற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதர வான சட்டப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது  தொடர்பான வழக்குகளை திறம்பட நடத்திய சங்கத்தின் வழக்கறிஞர் கே.சி. காரல்மார்க்ஸ் மற்றும் அவரது குழுவிற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தனது நெஞ்சார்ந்த நற்றிகளை யும், பாராட்டுக்களையும் உரித்தாக்கு கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.