சென்னை:
மாநில அளவில் செயல்படும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பாக அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் உதயமாகி உள்ளது.ஒவ்வொரு மாநிலத்திலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமாக செயல் படுகின்றனர். அந்தந்த மாநில தன்மைக்கேற்ப கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கங்கள் இயக்கங் களை நடத்தி வருகின்றன.அதேசமயம், மத்திய அரசுகடைப்பிடிக்கும் கொள்கைக ளால் ஏற்படும் ஓய்வூதியத்தின் மீதான தாக்கம், ஊதியக் கொள்கை, ஆட்குறைப்பு போன்றவை எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுமா? என்ற நிலையை உருவாக்கி உள்ளது.இந்நிலையில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், மாநில அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓய்வூதியர் சங்கங்களை ஒருங்கிணைக்கும் வகையில் திங்களன்று (நவ.25) பி.டி.ரணதிவே பவனில் (தில்லி) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் சுபாஷ் லம்பா, பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன், பொருளாளர் என். ஜெயச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், ‘அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலத்திற்கு ஒருவர் வீதம் அகில இந்திய அமைப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக நெ.இல.சீதரன் தேர்வு செய்யப்பட்டார்.2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆந்திராவில் சிறப்பு மாநாட்டை நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்வதென்றும், ஜன.8 அன்று நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதும் என்றும் தீர்மானிக் கப்பட்டுள்ளது.