tamilnadu

img

விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் டாஸ்மாக் கடை அகற்றம்

உளுந்தூர்பேட்டை, ஆக. 5- ஏழை எளிய மக்களின் குடியை கெடுத்து மதுக்கடை துவங்கி சில மாதங்களில் எட்டு  உயிர்களை பலிகொண்ட டாஸ்மாக் கடையை  மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தால் மதுக்கடை மூடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள நல்லாளக் குப்பம், கொக்காம்பாளையம் என பல்வேறு கிராமங்களின் மையப்பகுதியில் புதிதாக சில  மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்  கப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு நியாய விலைக்கடை மூன்று கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடையோ அரு கிலேயே உள்ளது. இக்கடை திறக்கும் போதே  சுற்றியுள்ள கிராம பெண்களும், மாணவர்க ளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை மீறி கடை திறக்கப்பட்டது. இந்நிலையில் கடையை நிரந்தரமாக அகற்றக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், நல்லாளக்குப்பம் ஊர்  பொதுமக்கள் சார்பில் கடந்த ஆண்டு நவம்பர்  20ஆம் தேதி உளுந்தூர்பேட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

பின்னர் தொடர்ந்து கடை நடை பெற்றதால் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அறி விக்கப்பட்டது. உடனடியாக டிசம்பர் 18ஆம்  தேதி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலு வலகத்தில் சங்கத் தலைவர்களுடன் அரசு நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து இரண்டு மாதகாலத்தில் கடையை அகற்றுவது தொடர்  பாக முடிவெடுப்பது என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் கடையை மூட இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.  கடந்த 9 மாதத்தில் இந்த கிராமத்தைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்டோர் மதுவினால் பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று (ஆக. 5) இந்த  மதுபானக் கடைக்கு பூட்டுபோடும் போராட்  டம் அறிவிக்கப்பட்டு, பூட்டுடன் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர், பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் அடுத்த உத்தரவு வரும்வரை (ஆக. 5)  டாஸ்மாக் கடையை திறப்பதில்லை என  காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன்  உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்திற்கு திருநாவலூர் கிழக்கு ஒன்றியத் தலைவர்  ஏ.குடியரசுமணி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை, தெற்கு  மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.