சென்னை:
தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 2016 ஆகஸ்டு முதல்2019 ஜூலை வரை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை,மது, சாதி வன்மம் ஆகியவற்றுக்குஎதிராக போராடி வந்த மனித உரிமைஆர்வலர்கள் 38 பேர் படுகொலைசெய்யப்பட்டு இருப்பதாக எவிடன்ஸ்அமைப்பு தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர்புகழுர் விசுவநாதனை நள்ளிரவில் கைது செய்து, முகிலன் வழக்கில்அவரையும் சேர்த்து சிறை வைத்துள்ளது தமிழக அரசு. தமிழ் நாட்டில் சமூக ஆர்வலர்கள், மனிதஉரிமைப் போராளிகள் தொடர்ந்துதமிழக அரசின் அடக்குமுறைக்கு உள்ளாவது தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.இதனால், ஊக்கம் பெற்று இருக்கின்ற சமூக விரோதிகளும், மணல் கொள்ளையர்களும் மனித உரிமை ஆர்வலர்களைப் படுகொலை செய்யும் போக்கு சர்வ சாதாரணமாக நடந்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும்,நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடிவரும் சமூகப் போராளி திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீதுபோடப் பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.முதலைப்பட்டியில் வீரமலை,நல்லதம்பி ஆகியோரைப் படுகொலை செய்த குற்றவாளிகள் எவராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து, கூண்டில் நிறுத்த வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி தமிழகத்தில் தொடர அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.