சென்னை, ஆக. 11- சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க 4 மண்டலங்களில் கூடுதலாக பரி சோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 328 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, அம்பத்தூர் மண்டலத்தில் 1619 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1214 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1433 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 781 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இந்த 4 மண்டலங்களில் கூடுதலாக கொரோனா தடுப்பு பரிசோதனை மையங் களை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனையடுத்து தடுப்புகள் மற்றும் பரிசோதனை முகாம்கள் அமைப்ப தன் மூலம் விரைவில் அப்பகுதிகளில் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.