சென்னை, ஆக.25- நடைபயிற்சி செய்வோ ரின் கோரிக்கையை ஏற்று சைக்கிள் ஷேரிங் திட்டத்தை கூடுதலாக 5 மணி நேரம், அதாவது காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தலாம் என்று ஸ்மார்ட் பைக் நிறுவனம் அறிவித்துள்ளது. வாகனம் இல்லா போக்கு வரத்து கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக மெரினா கடற்கரை, அண்ணா நகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மெரினா கடற்கரையில் 5 சைக்கிள் நிலையங்கள், அண்ணா நகர், செனாய் நகர், திருமங்கலம் உள்ளிட்ட 25 மெட்ரோ இடங்களில் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு மணி நேரத்திற்கு ரூ.5ம், அடுத்த ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ரூ.9ம் கட்ட ணம் செலுத்தி இவற்றை பயன்படுத்தலாம். மேலும் ரூ.49 செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த லாம். இதை தவிர்த்து ரூ.249 செலுத்தி ஒரு மாதத்திற்கும், ரூ.699 செலுத்தி 3 மாதத்திற்கும் பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை மேலும் 15 இடங்களுக்கு விரிவாக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியது. அதன்படி நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டு வரும் தி.நகர் பாண்டி பஜாரில் காவல் நிலையம் எதிரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அருகில் மற்றும் பிக் பஜார் முன்பகுதியிலும், ஜி.என்.செட்டி சாலை, தேனாம்பேட்டை, ஏஜிடிஎம்எஸ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலையம், கஸ்தூரிபா நகர் பறக்கும் ரயில் நிலையம், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம், கீழ்பாக்கம் மெட்ரோ, நேரு பார்க் மெட்ரோ, எழும்பூர் மெட்ரோ உள்ளிட்ட இடங்களிலும் சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த திட்டத்தின்படி தற்போது காலை 5 மணி முதல் இரவு 10 மணி சைக்கிள்களை பயன்படுத்தலாம் என்று ஸ்மார்ட் பைக் நிறுவனம் அறி வித்துள்ளது. குறிப்பாக மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் காலை நேரங்களில் நடைபயிற்சி மேற் கொள்வோர்களின் கோரிக்கையினை ஏற்று இந்த வசதி ஏற்படுத்தபட்டு ள்ளதாக ஸ்மார்ட் நிறுவன அதிகாரி ராம் தெரிவித்தார். இதற்கு முன்பாக காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சைக்கிளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.