tamilnadu

img

இஸ்ரோ தலைவருக்கு அப்துல்கலாம் விருது

சென்னை, ஆக.22-    இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அறிவித்திருந்த அப்துல்கலாம் விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழ னன்று(ஆக.22) வழங்கினார். நாட்டின் 73-வது சுதந்திர தின  விழா கடந்த 15 ஆம் தேதி  கோலாகலமாக கொண்டாடப் பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியையேற்றி சுதந்திர தின உரையாற்றினார். இதனையடுத்து சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருது கள் வழங்கினார். இதில் டாக்டர்  அப்துல்கலாம் விருது போரூர்  ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் தியாக ராஜனுக்கு வழங்கப்பட்டது. துணிவு மற்றும் சாகச  செயலுக்கான கல்பனா சாவ்லா  விருது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரித்தீக்கு வழங்கப் பட்டது. முதலமைச்சரின் நல் ஆளுமை விருது தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிக வரித்துறை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்  பட்டு வருவதற்காக அப்துல்  கலாம் விருது அறிவிக்கப் பட்டது. ஆனால், அன்று வர இய லாத காரணத்தால், வியாழனன்று (ஆக.22) முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இஸ்ரோ தலை வர் சிவன் தலைமைச் செயல கத்தில் சந்தித்து விருது, காசோ லையைப் பெற்றுக் கொண்டார்.