சென்னை மே 30-மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின் போது மயங்கி விழுந்து பலியான 8 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மக்களவைத் தேர்தலின் போது மயங்கி விழுந்து மரணமடைந்த வேலூர் அனந்தலை கிராமத்தை சேர்ந்த துளசி அம்மாள், சிவகிரி முருகேசன், கடையம் செண்டு, குறுங்கலூர் மல்லிகா, கோவை அய்யமாள், ஓமலூர் வேடப்பட்டி கிருஷ்ணன், உசிலம் பட்டி புதூர் முத்துப்பிள்ளை, மேட்டூர் ஆவடத்தூர் ஜனார்த்தனன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த 8 பேர்களின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.