சென்னை:
அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-
கொரோனா 2 ஆம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.கடந்த ஜூலை 9 ஆம் தேதி நிலவரப் படி தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.
அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் குமரி மாவட்டத்தில் 2 கட்டுப் படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அவை குறைந்துள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.