சென்னை:
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஜூலை 24ஆம் தேதி வரை கோவை, நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.வடமேற்கு வங்கக் கடலில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம், ஆந்திரம், மன்னார் வளைகுடா, தெற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.