சென்னை:
பயணிகள் வருகை குறைந்து வருவ தால் மே 8 முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 28 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ரயில்களில் பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகிறார்கள். இதனால் (சனிக்கிழமை) எட்டாம் தேதி முதல் வருகிற 31ஆம் தேதி வரை 28 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்துசெய்துள்ளது.சென்னையிலிருந்து காரைக்குடி, மதுரை, திருச்சி, கோவை, நாகர்கோவில் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலும் அதேபோல் மறு மார்க்கத்தில் மதுரை, திருச்சி, காரைக்குடி,கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் வருகிற 28ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.