சென்னை,ஜூன் 10- அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவர்களின் ஓட்டுநர் உரி மத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தாம்பரத்தில் வேகமாக வந்த கார் சாலைத் தடுப்புகள் மற்ற வாகனங்கள் மீது மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், திங்களன்று (ஜூன்10) வழக்குகள் விசாரணை தொடங்கும் முன்பு இது தொடர்பான ஊடக செய்திகளை மேற்கோள் காட்டிய நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், அதனை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளதா கவும், கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது? என தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரி மத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். வேகமாக, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தும் குற்றத்திற் கான தண்டனையை 2 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் சட்டப்பிரிவை அமல்படுத்த தமிழக அரசு எடுத்த நடவ டிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.