செங்கல்பட்டு,டிச.16- பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர் ஜான்லூயிஸ் வலியுறுத்தி யுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் திங்களன்று (டிச.16) அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில், ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதி யோர், கல்வி உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 242 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் வழங்கினார். மேலும், வருவாய்த் துறை சார்பாக 7 நபர்களுக்கு முதியோர் மாதாந்திர உதவித் தொகையும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு கல்வி உதவித் தொகையும், சாலை விபத்தில் பலியான 10 குடும்பங்களுக்கு தால ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பேசுகையில், ‘பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களை முறையாக பாதுகாக்க வேண்டும். மனுக்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். உங்களால் முடிந்த பணிகளை உடனே செய்ய வேண்டும். இல்லை எனில் என் கவனத்திற்கு முறைப்படி கொண்டு வரவேண்டும். உங்களுக்கு உள்ள அதி காரத்தை முறைப்படி பயன்படுத்தி மக்களின் குறைகளை விரைவாக தீர்வு காண வேண்டும்’ என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கே.பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி, மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.