செங்கல்பட்டு,டிச.21- செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா தலைமையில் நீதித்துறை, நிர்வாக துறை, காவல்துறை ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உமா மகேஸ்வரி, வழக்குகளின் துணை இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் செங்கல்பட்டு கண்ணன், காஞ்சிபுரம் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வழக்குகளை முடித்து அவர்களுக்கான உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படுத்துவது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆலோசனை முகாம்கள் செயல்படும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை, செங்கல்பட்டு நகராட்சி, தாம்பரம் நகராட்சி, வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், சட்ட கல்லூரி, கிளை சிறைச்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, புதிய நீதிமன்ற கட்டிடம் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.