tamilnadu

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,000ஐ தாண்டியது கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜூலை 20 - செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. எனவே, மாவட்டம்  முழுவதும் பரிசோதனைகளை அதிகப்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்த  இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்படுகிறது. இதன்படி திங்களன்று (ஜூலை 20) மேலும் 354  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டத. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 27ஆக  அதிகரித்தள்ளது. இதில் 7ஆயிரத்து 276 பேர் குண மடைந்துள்ளனர். உயிரிழப்பு 201 ஆனது. கொரோனா தொற்று பரவல் கிராமங்களில் வேக மாகப் பரவி வருகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங்கர் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரானா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. கிராமப்புற மக்கள் பரி சோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது. பொதுபோக்குவரத்து இல்லாத நிலையில் மக்கள் கடுமையான சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே,  கிராம சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் கொரானா தொற்றுக்கான பரி சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில் 1.4 சதவிகிதமாக உள்ள இறப்பு  விகிதம், செங்கல்பட்டு மாவட்டத்தின் 1.99 சதவிகிதமாக  உள்ளது. இது மாநில சராசரியை விட அதிகம். மாவட்டத்திற்குட்பட்ட தாம்பரம், பல்லாவரம் வட்டங்கள் சென்னைக்கு மிக அருகில் உள்ளன.

நோய்த் தொற்று அதிகமாக உள்ள இந்தப் பகுதிகளி லிருந்து நோயாளிகள் செங்கல்பட்டு மருத்துவ மனைக்கு வருவதைவிட, அரசு மருத்துவமனைகள் அதிகமுள்ள சென்னைக்கு அனுப்புவது பொருத்த மாக இருக்கும். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவ மனையிலிருந்து உயர் சிகிச்சைக்காகச் செங்கல்  பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கின்றனர். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளி கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கொரானா பரிசோதனைகளை அதிகப்ப டுத்தவும், தாம்பரம், பல்லாவரம் வட்டாரத்தில் பாதிக்  கப்பட்டவர்களை சென்னையில் உள்ள அரசு மருத்து வமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கவும் வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.