செங்கல்பட்டு, பிப்.20- செங்கல்பட்டு அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் உள்நோயாளிகளுக்கான போதிய படுக்கை வசதி இல்லாததால் வராண்டாவில் படுக்கைகள் போடப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. செங்கல்பட்டில் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் 1200 உள் நோயாளிகளும், நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்க ளூரூ தேசிய நெடுஞ்சாலை, சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்க ரைச் சாலை என அனைத்து சாலை களிலும் நடைபெறும் சாலை விபத்துக்களில் படுகாயம் அடை பவர்களும் இங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது. இந்நிலையில் மருத்துவமனை அவசர சிகிச்சை மையத்திற்கு அரு கில் முதல் மாடியில் உள்ள பெண்க ளுக்கான உள்நோயாளிகள் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத தால் உள்நோயாளிகள் பிரிவுக்குச் செல்லும் வராண்டாவில் படுக்கைகள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. வராண்டா பகுதியில் ஜன்னல்கள் இல்லாமல் கொசு வலை மட்டும் பொருத்தியிருக்கும் நிலையில் அதிகாலை பனிப்பொழி வால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதே போன்று அவசர சிகிச்சை மையம் அருகில் 2013 ஆம் ஆண்டு அடிப்படை சேமிப்பு நிதியி லிருந்து ரூ.8.50 லட்சத்தில் பார்வை யாளர்கள் தங்குமிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிலிருந்து வந்தது. தற்போது அந்த கட்டடம் ரத்தப் பரிசோ தனை மையமாக மாற்றப்பட்டுள் ளது. இதனால் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மருத்துவமனை சாலையில் ஆங்காங்கே அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மருத்துவ மனை வளாகத்திற்குள் உள்ள சிமெண்ட் சாலைகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதால் பொது மக்கள் நடந்து செல்வதற்கும் நோயாளிகளைச் சக்கர நாற்காலி யில் கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் அனுபமாவிடம் கேட்டபோது உள் நோயாளிகள் படுக்கை வசதிக்காக மாடியில் புதிய தாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வரு கின்றது. பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. முடிந்தவு டன் இப்பிரச்சனை சரியாகிவிடும், பார்வையாளர்கள் தங்குமிடத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுவரு கின்றது. அதேபோன்று சாலை களைச் சீரமைக்க நிதி ஒதுக்கப் பட்டு செப்பனிடும் பணிகள் துவங்க உள்ளது. இருசக்கர வாகனங் களை ஒழுங்கு படுத்துவதற்கு காவல் துறையிடம் தெரிவித்துள்ளோம். இரண்டு மாதங்களில் பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என்றார்.