மத்திய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் இடது சாரி கட்சிகளின் சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் துவக்கிவைத்தார். பகுதிச் செயலாளர் கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.