states

மக்கள் விரோத கொள்கைகளை எதிரொலிக்கும் புதுவை பட்ஜெட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரி, ஆக.24- புதுச்சேரி மாநில என்.ஆர் காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்து ள்ள பட்ஜெட் அரசியல் சாகசத்துடன கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.   இது குறித்து கட்சியின் பிரதேச செய லாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:     சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசு  ரூ. 10,696.61  கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதைக்கூட ஒன்றிய அரசு காலம் தாழ்த்திதான் அனுமதி வழங்கியது. இதில் வெளிப்படை தன்மை இல்லை. அரசியல் சாகசமும், மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தும் வஞ்சகமும் கொண்ட தாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி தான் ஆட்சியில் உள்ளது. அப்படியிருந்தும் புதுச்சேரி மாநில அரசு கோரிய ரூ.11,000 கோடி வரவு-செலவு திட்டத் திற்கு இந்த ஆண்டும் ஒப்புதல் அளிக்க வில்லை. கூடுதல் நிதியும் கிடைக்க வில்லை.

மக்களின் எண்ணங்களை பிரதி பலிக்காத பட்ஜெட்
  துணை நிலை ஆளுநர் உரையுடன் துவங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிய வில்லை. இதனால் கூட்டத் தொடரை யே ஒத்திவைக்க வேண்டிய அவ லத்தை புதுச்சேரி மாநிலம் சந்தித் தது. துணை நிலை ஆளுநர் உரை யின் வழக்கமான அலுவல் பணி களை உள்ளடக்கிய வேலைகளின் தொகுப்பாகவே இந்த பட்ெஜட் அமை ந்திருக்கிறது. இந்த பின்னணியில் தாக்கல் செய்யப்பட்ட மாநில அரசின் பட்ெஜட் மக்களின் எண்ணங்களை எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்க வில்லை.

வளர்ச்சித்திட்டத்திற்கு நிதிவெட்டு
ரூ.10,696.91 கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.9919.26 ஒப்புக்கொள்ளப்பட்ட செல வினங்களாகும். எஞ்சிய ரூ.777.35 கோடியில் வளர்ச்சி திட்டம் எதை செயல்படுத்த முடியும்? ரூ. 1889.61 கோடி கடன் திரட்டுவது அல்லது மாநில அரசின் சொந்த வருவாயை பெருக்குவதை பொறுத்தே பட்ஜெட் முழுமை பெறும் நிலை உள்ளது.  கடந்த பட்ஜெட்டில் பொது விநியோகத் திட்டத்தை செயல் படுத்த ஒன்றிய அரசிடம் இருந்து நிதி உதவி பெற்று அதற்கு இணை யாக  மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்து மூலதனம் உருவாக்கப்படும். இதன் மூலம் பருப்பு, எண்ணெய் மற்றும் தானிய வகைகள் ரேசன் கடைகள் மூலம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் சாத்தியக்கூறு குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை அறிக்கை அளிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த குழுவின் அறிக்கை என்ன ஆனது? பொது விநியோகத் திட்டத்திற்கான மூலதன நிதி ஒதுக்கீடு என்ன ஆனது? என்பது இந்த பட்ஜெ ட்டில் இடம் பெறவில்லை.

கடை தேங்காயை எடுத்து.....
 கடந்த 15 மாதங்களுக்கு வழங் கப்படாத அரிசிக்கு பதிலாக சிவப்பு நிற குடும்ப அட்டைக்கு ரூ. 9000, மஞ்சள் அட்டைக்கு ரூ. 4500 வழங்கப்ப டவில்லை. இது குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை. அதே நேரத் தில், அரிசி திட்டத்திற்கு ஒதுக்கிய பண த்திலிருந்து மழை நிவாரணம் வழங்கப் பட்டதாக துணை நிலை ஆளுநரின் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ‘கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த’ கதை யாக இயற்கை பேரிடர் நிவாரண நிதி யில் இருந்து நிவாரணம் வழங்காமல் அரிசி திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தியது மிகப்பெரும் மோசடி யாகும். அதுமட்டுமல்ல முறையற்ற நிதி கையாளுகைக்கு ஒப்பாகும். 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட அரசின் எந்த உதவித் தொகையும் பெறாதவர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. விலைவாசி உயர்வு ,வேலையின்மை போன்ற சூழலில் இத்தொகை போதுமானது அல்ல. மேலும் இத்திட்டத்திற்கு எவ்வளவு நிதி  ஒதுக்கப்பட்டது . எந்த துறையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பது தெளிவில்லை.

மோசடியான அறிவிப்புகள்
இரண்டு லட்சம் உழைப்பாள ர்கள் உள்ள முறைசாரா தொழிலா ளர்களுக்கு நலவாரியம் அமைக்க விதி முறைகள் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. நடப்பு பட்ஜெட்டிலும் நலவாரியம் அமைத்து நிதி ஒதுக்க முன்வராத அரசு, ஐம்பொன் சிலை செய்யும் கலைஞர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவித்திருப்பது ஒரு மோசடியாகும். பஞ்சாலைகளை நவீனப்படுத்தி செயல்படுத்துவது, கிராமப்புற வேலை உறுதித் திட்டம், வீடு இல்லாத மக்களுக்கு குடிமனை பட்டா, குறைந்த பட்ச கூலி சட்டத்தை அமல்ப டுத்துவது, புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்குவது உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

வெளிப்படைத்தன்மை இல்லை
பிரெஞ்சு முதலீட்டாளர்கள், பிரெஞ்சு- இந்திய முதலீட்டாளர்கள் மூலம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆட்சி யாளர்களின் முந்தைய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை. வெற்று அறிவிப்புகளை உள்ளடக் கியது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.