tamilnadu

img

உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் 8-வது இடத்தில் ஐதராபாத் விமான நிலையம்

உலகின் சிறந்த விமான நிலையங்களில், ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தை பிடித்து, சிறந்த 10 விமான நிலையங்களின் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.

ஏர்ஹெல்ப் என்ற நிறுவனம் 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் குறித்து ஆய்வு செய்து, தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் முதல் இடத்தில் கத்தார் நாட்டின் ஹமத் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இதை தொடர்ந்து ஜப்பானின் டோக்யோ விமான நிலையமும், கிரீஸ் நாட்டின் ஏதன்ஸ் சர்வதேச விமான நிலையமும் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இதில், இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தை பிடித்து, சிறந்த 10 விமான நிலையங்களின் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து, உலகின் சிறந்த விமான சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்திலும், அமெரிக்கன் ஏர்வேஸ் இரண்டாம் இடத்திலும், ஏரோமெக்ஸிகோ மூன்றாம் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.