புதுதில்லி:
சானிடைசர் திரவ கலன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவத்தொடங்கியதும், அனைத்து வகையான சானிடைசர் திரவ ஏற்றுமதியையும் மத்திய அரசு தடை செய்தது.கடந்த மாதம், இதில் ஒரு தளர்வாக ஆல்கஹால் அடிப்டையிலான சானிடைசர் தவிர பிறவற்றுக்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இப்போது கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக தலைமை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், “டிஸ்பென்சர் பம்பு பொருத்தப்பட்ட கலன் தவிர்த்து பிற அனைத்து வடிவத்திலான சானிடைசர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது உடனடி அமலுக்கு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.