tamilnadu

img

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க மேலும் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என மோடி அரசு பொதுமக்களை கட்டாயப்பட்டுத்தி உள்ளது. அதற்கான கடைசிதேதி மார்ச் 31 என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காலக்கெடு முடிந்த சூழலிலும் பலர் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வில்லை. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண் அங்கீகரிக்கப்படாது எனக் கூறப்பட்டது. இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கெடு தேதியை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆறு மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டு கெடு தேதி செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.