“இந்த பூமிப் பந்தையே மிகப் பெரும் வணிக லாபத்திற்கான ஒரு பொருளாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஒருவர் தன்னைத்தானே வியாபாரப் பொருளாக மாற்றி அழித்துக் கொள்வதற்கு சமமானது - ஏனென்றால் நமது அடிப்ப டையான இருத்தலுக்கு - உயிர் வாழ்வதற்கு - தேவை யான முதல் நிபந்தனையே இப்பூவுலகம் உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இன்றைய தினம் நெறிமுறை ஏதுமற்ற, இயற்கையிடமிருந்து மனிதனையே துண்டித்து வைக்கிற ஒரு கொடிய நிலைமை உருவாகி யிருக்கிறது. இந்த பூமிப் பந்து விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய வெகு சில நபர்களின் ஏகபோக ஆதிக்கத்திற்குரிய பொரு ளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது; மற்றவர்கள் எல் லோரும், புவியில் அவர்கள் வாழ வேண்டிய வாழ்க்கையிலி ருந்து, அதற்குத் தேவையான சூழலிலிருந்து வெளி யேற்றப்படுகிறார்கள். இதன்மூலம் பூமிப் பந்து மேலும் மேலும் கூறுபோடப்பட்டு முற்றிலும் ஒரு வணிகமய மாக்கப்பட்ட பொருளாக மாற்றப்படுகிறது.”
-‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020’ என்ற மத்திய பாஜக அரசின் கொடிய அறிவிப்பை எதிர்த்து ஒட்டு மொத்த இந்தியாவும் போராடிக் கொண்டிருக்கிற இந்த வேளையில், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே மாமேதை ஏங்கெல்ஸ் எழுதிய இந்த வார்த்தைகள் மிகுந்த முக்கி யத்துவம் பெறுகின்றன. முதலாளித்துவத்தின் அடிப்படைக் குணமே மேலும் மேலும் லாபத்தை குவிப்பது; மூலதனத்தை குவிப்பது என்பதுதான். அதற்காக அது என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதை மார்க்சும், ஏங்கெல்சும் தங்களது படைப்புகளில் பல கோணங்களில் விளக்கியிருக்கின்றனர்.
இயற்கையின் இயக்கவியல்
குறிப்பாக, நாம் வாழும் புவிக்கோளமும், அதன் இயற்கையும் சுற்றுச்சூழலும் அது சார்ந்த ஒட்டு மொத்த வளங்களும் எப்படியெல்லாம் சூறையாடப்படுகின்றன; அதற்கு அடிப்படையாக முதலாளித்துவ உற்பத்தி முறை எப்படி துணை நிற்கிறது என ‘இயற்கையின் இயக்கவியல்’ என்ற தமது தனிச்சிறப்புமிக்க நூலில் ஏங்கெல்ஸ் விளக்கு கிறார். இந்த நூலை எழுதுவதற்காக இயற்கை அறிவிய லின் அனைத்து அம்சங்களையும் நுட்பமாக ஆராய்ந்த வர் அவர். தனது நீண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மனித குலத்தின் இயற்கை அறிவியல் வளர்ச்சியில் மூன்று மிக முக்கியமான முன்னேற்றங்களை சுட்டிக்காட்டினார். ஒன்று, ஒவ்வொரு உயிரினத்தின் அடிப்படை இயங்கு சக்தி யாக இருப்பவை அதன் செல்கள்தான் என்று 1838 - 39ல் விஞ்ஞானிகள் எம்.ஜே.ஸ்லைடன் மற்றும் டி.ஸ்ச்வான் ஆகிய விஞ்ஞானிகளது கண்டுபிடிப்பு. இரண்டு, ஓரிடத்தி லிருந்து மற்றொரு இடத்திற்கு எந்தவிதமான ஆற்றலை யும் கடத்தமுடியும் என்றும் ஆற்றலை தேக்கி வைத்து பாது காக்க முடியும் என்றும், 1842க்கும் 1847க்கும் இடையில் விஞ்ஞானிகள் ஜே.ஆர்.மேயர், ஜே.பி.ஜூல், டபுள்யூ ஆர். குரோவ், எல்.ஏ.ஹோல்டிங் மற்றும் எச்.ஹெல்ம் கோல்ட்ஸ் ஆகியோர் கண்டுபிடித்த விதிகள். இந்த விதிகள், பூமி உள்ளிட்ட இயற்கைச் சூழலில் அமைந்த இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச வெளியிலும் ஒவ்வொரு பொருளும் தொடர்ச்சியாக மற்றொரு பொருளாக மாறி கொண்டிருக்கி றது என விளக்குகின்றன. மூன்று, 1859ல் உயிரியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் கண்டறிந்து வெளியிட்ட உயிரிகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாடு. அதன்படி ஒவ் வொரு உயிரியும் இயற்கையான தேர்வின் மூலம் எப்படி உருவாகின்றன, எப்படி பரிணாம வளர்ச்சி பெறுகின்றன என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இந்த மூன்று பிரதானமான கண்டுபிடிப்புகளே மனித குலத்தின் இயற்கை அறிவியல் குறித்த அறிவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றன. இவை பற்றியும், இவை சார்ந்த அறிவியல் துறைகள் அனைத்தையும் நுட்பமாக ஆய்வு செய்த மாமேதை ஏங்கெல்ஸ், இந்த கண்டுபிடிப்பு கள் அனைத்திலும் அடிப்படைக் கூறாக இருப்பது இடை விடாத இயக்கமே என்பதை விவரித்தார். மார்க்சும், ஏங்கெல்சும் சமூக, பொருளாதார ஆய்வில் முன்வைத்த ‘இயக்கவியல்’ என்பதன் அடிப்படை விதிகள், ஒட்டு மொத்த இயற்கை அறிவியலுக்கும் பொருந்துகிறது என்பதை அறிந்தார்கள். அளவு மாற்றம் குணமாற்றத்தை ஏற்படுத்தும்; முரண்பட்ட எதிரெதிர் துருவங்கள் ஒன்றை யொன்று சார்ந்தும், இணைந்தும் செயல்படும்; ஒரு நிலை யிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்கிற நிலை மறுப்பின் நிலை மறுப்பு ஆகிய மூன்றும்தான் இயக்கவியலின் அடிப் படை விதிகள் ஆகும். இந்த விதிகளே இப்புவியின் ஒட்டு மொத்த உயிரினங்கள், அவற்றின் பரிணாம வளர்ச்சி, அவை சார்ந்துள்ள சூழலியல் வளர்ச்சி, சமூகவியல் வளர்ச்சி என அனைத்துக்கும் அடிப்படையாக அமை கின்றன என விவரிக்கிறார் ஏங்கெல்ஸ்.
எனவே இயற்கையின் ஒரு பகுதியான மனிதகுலத்தை, இயற்கையிலிருந்து - அதன் அடிப்படை அம்சமான சுற்றுச் சூழலிலிருந்து - அதன் இயல்பான பரிணாம வளர்ச்சியிலி ருந்து துண்டித்துவிட்டால் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமாகும். அந்த முரண்பாடு, மனிதகுலத்தின் அழிவிற்கு வித்திட்டு விடும் என எச்ச ரிக்கிறார் ஏங்கெல்ஸ்.
முதலாளித்துவ உற்பத்தி முறை
ஆனால் அவர் எச்சரித்தபடியே நடந்து கொண்டிருக்கி றது. முதலாளித்துவமும், கொள்ளை லாபத்தையே அடிப்படையாக கொண்ட அதன் உற்பத்தி முறையும், ஒட்டு மொத்த மனிதகுலத்தையும், இயற்கையின் எதிரியாக மாற்றியிருக்கிறது. கடந்த பத்தாண்டு காலத்தில் உலகின் மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளிகளின் 3 ஆயிரம் பெரு நிறுவனங் கள் 2.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு உலகம் முழுவ திலும் மீட்க முடியாத அளவிற்கு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தியிருக்கின்றன.
கடந்த பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் 5 கோடி ஹெக்டேர் பரப்பளவிலான வனங்களை பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள் அழித்தொழித்திருக்கின்றன. இயற்கைச் சூழலையும், அவற்றின் உயிரிச் சூழ லையும் அழித்து கார்ப்பரேட் விவசாய பூமியாக மாற்றியி ருக்கின்றன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிகள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே லட்சக்கணக்கான வகையிலான உயிரிகள், புவியின் உயிரிச் சூழலிலிருந்தே அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. மற்றொரு புறத்தில் உலக வனங்களின் 80 சதவீதம் ஆபத் தின் பிடியில் சிக்கியிருக்கிறது. இவற்றின் விளைவாக உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் ஒட்டு மொத்த மாக அதிகரித்திருக்கிறது.
பயங்கரமான 15 கம்பெனிகள்
இது தொடர்பான ஆய்வில், 15 மிகப் பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்கள், பூமியின் ஒட்டு மொத்த இயற்கை சமநிலையையே அழித்து வருகின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அமெ ரிக்காவை தலைமையிடமாக கொண்ட மகா கோடீஸ்வர கார்ப்பரேட் கம்பெனிகளாகும். ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட் லேண்ட்(ஏடிஎம்), ஏஇஎஸ், பிபிஎல், பிராகிராஸ் எனர்ஜி, டியூக் எனர்ஜி, பர்ஸ்ட் எனர்ஜி, சதர்ன், புங்கே, அமெ ரிக்கன் எலக்ட்ரிக் பவர், அமெரன், கன்சோல் எனர்ஜி, கன் னாக்ரா புட்ஸ், அல்லே ஹனி எனர்ஜி, என்ஆர்ஜி எனர்ஜி, பீபாடி எனர்ஜி ஆகிய 15 நிறுவனங்கள் உலகின் அனைத்து விதமான வளங்களை - பெட்ரோலிய வளங்கள், கனிம வளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் - மிக அதிகமாகச் சூறையாடி புவியின் உயிரிச் சூழலுக்கு மிக மிக அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தி வருகிற நிறுவனங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக பல டிரில்லி யன் டாலர் மதிப்பிலான வளங்களும், சொத்துக்களுமாகிய மூலதனம் சிலரின் கைகளில் குவிக்கப்படுகிறது. ஏங் கெல்ஸ் கூறியபடி, வெகு சிலரால், இந்த பூமிப் பந்து ஏக போக பொருளாக அனுபவிக்கப்படுகிறது. ஒட்டு மொத்தமாக உலகின் இயற்கைச் சமநிலையை முதலாளித்துவம் தனது கொள்ளை லாபவெறிக்காக, ஒரு வேட்டைக் காடாக மாற்றி சீர்குலைத்து, அதன் விளைவாக சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய அழிவுகள்
இயற்கை மீதான முதலாளித்துவத்தின் கோரத் தாக்கு தலும் கொடூரச் சுரண்டலும் இயற்கையின் உயிரி சூழ லுக்கு முன்னெப்போதுமில்லாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் தொடர் விளைவுகளில் ஒன்றாகவே புதிய புதிய வைரஸ்களும் நோய்களும் மனித குலத்தை தாக்குகின்றன. கொரோனா வைரசும் அப்படி உருவானது தான். இயற்கையான பரிணாம வளர்ச்சிக்கான சூழல் சிதைக்கப்பட்ட நிலையில் மரபணுக்களின் பிறழ்வால் கொடிய குணம் கொண்ட புதிய வைரஸ் பிறந்தது. முதலா ளித்துவத்தின் கொடிய சுரண்டலின் விளைவாக அழிவுக்கு உள்ளான இயற்கை, இப்போது மனிதகுலத்தை திருப்பித் தாக்குகிறது.
இதற்கு அடிப்படையான முதலாளித்துவ உற்பத்தி முறையானது, இயற்கையை ஆராதிக்காது; லாப வேட்டைக்காக இயற்கையின் ஒரு பகுதியான மனித குலத்தையே அழிக்கத் தயங்காது. மரணக் குவியலைப் பார்த்து பீதி அடையாது. மனிதர்களையும் உயிரினங்களை யும் காப்பாற்றி ஆக வேண்டுமே என்று பொறுப்பெடுத்துக் கொள்ளாது. இத்தகைய முதலாளித்துவ உற்பத்தி முறை யை - முதலாளித்துவ சமூக பொருளாதார அரசியல் கட்ட மைப்பைத் தகர்த்து மனிதகுலத்தை - இயற்கையை நேசிக்கிற; இயற்கையைச் சிதைக்காமல் மனிதனின் உச்சக்கட்ட மகிழ்வான வாழ்வை உறுதி செய்கிற சோசலிசப் பொன்னுலகமே தீர்வு என வழிகாட்டுகிறார் ஏங்கெல்ஸ். எனவே, இன்று நமது காலத்தில் சுற்றுச்சூழலை பாது காப்பதற்காக நடத்துகிற மாபெரும் போராட்டங்கள், அடிப்ப டையில் நிலபிரபுத்துவ - முதலாளித்துவ அமைப்பு முறை க்கு எதிரான போராட்டங்கள். இந்தப் போராட்டங்களுக்கு தத்துவார்த்த வழிகாட்டியாக என்றென்றும் திகழ்கிறார் உலகின் முதல் சூழலியல் அரசியல் போராளியாம் தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ்.