tamilnadu

img

மூவர்ணக்கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் சங்க பரிவார் அமைப்பினரால் படுகொலை 

பீகாரில் தேசியக்கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவனை சங் பரிவார் அமைப்பினர் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பீகாரில் அமீர் ஹன்ஜ்லா (18) என்பவர் புல்வாரிஷரிப் பகுதியில் கடந்த டிசம்பர் 21 அன்று நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மூவர்ணக்கொடியை ஏந்தி உற்சாகமாக கலந்து கொண்டார். அப்போது குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது செங்கற்கல்லை எரிந்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு திரண்ட சங் பரிவார் கும்பல் அமீரை துரத்தியது. அமீர் தேசியக்கொடியை உயர்த்தி பிடித்தவாறு ஓடினார். 
இதையடுத்து அவரை யாரும் பார்க்கவில்லை. கடைசியாக 10 நாட்களுக்கு பின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அமீரின் உடல் புல்வாரிஷரீப்பில் தலைமையகம் அருகே  சடலமாக மீட்கப்பட்டது. இவரது தலை சிதைக்கப்பட்டு வயிற்றில் கத்தி குத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 
இதுகுறித்து அமீரின் தந்தை சோஹைல் அஸ்மத் தேசிய கொடியைக் கூட மதிக்க மாட்டார்கள். தேசிய கொடியுடன் தான் ஓடிய எனது மகனை அவர்கள் கொலை செய்துள்ளனர். தேசியக்கொடியை கையில் வைத்திருக்கும் சிறுவனை எந்த வகையான மக்கள் கொலை செய்வார்கள். ஆர்எஸ்எஸ் பஜ்ரங்க தள் அமைப்பினரால் எனது மகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கண்ணீருடன் கூறி உள்ளார்.