மன்னார்குடி, டிச.5- ஜப்பான் நாட்டில் ஜூஸி நிறுவனம் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்களால் செயல்பட்டு வரும் அமைப்பாகும். இந்த அமைப்பானது மருத்துவமனைகளின் மருத்துவ சேவை தொடர்பான செயல்பாடுகளை ஆய்வு செய்து சிறந்த மருத்துவமனைக்கான ஜூஸி - 5எஸ் எனும் தரச்சான்றினை வழங்கி வருகிறது. இவ்வாண்டு தஞ்சை மருத்துவ மனையில் வழங்கப்படும் மருத்துவ சேவை தொடர்பான செயல்பாடுகளை ஆய்வு செய்த மேற்படி ஜப்பான் நாட்டில் செயல்படும் அமைப்பு ஜூஸி - 5எஸ் தரச்சான்றினை மீனாட்சி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. நமது நாட்டில் தேசிய அளவில் மருத்துவமனைகளுக்கான தரநிலை கட்டமைப்பை ஏற்படுத்தி, அதனை முறையாக பின்பற்றும் மருத்துவ மனைகளுக்கு என்ஏபிஎச் அங்கீகார தரச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மீனாட்சி மருத்துவ மனையானது ஏற்கனவே தஞ்சை டெல்டா மாவட்டங்களில் என்ஏபிஎச் முழு தரச்சான்று பெற்ற முதல் மருத்துவ மனை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை தென் இந்தியாவி லேயே முதல் முறையாக ஜப்பான் நாட்டின் ஜூஸி- 5எஸ் தரச்சான்றி தழை பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. அதற்குரிய சான்றிதழை மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரவீன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார். உடன் மகளிர் நல மருத்துவர் டாக்டர் சசிகலா, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.காந்திராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர் ஐசக் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இருந்தனர். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர் சீரிய வழிகாட்டு தலின் பேரில் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கடந்த 7 ஆண்டு களாக சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட் டோருக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கியுள்ளது.