tamilnadu

img

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று மறைமுக தேர்தல்

சென்னை, ஜன. 29- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக  தேர்தலில் முழுக்கவனம் செலுத்தி நடத்த வேண்டுமென  மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல்  ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு காரணங் களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 335  பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் தவறாமல் வாக்களிக்க அறிவுறுத்தி யுள்ள தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அலுவ லர்கள் தனிக்கவனம் செலுத்தி, ஒருங்கிணைப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்வதுடன் போதிய பாதுகாப்பு வசதிகளையும் செய்து, தயாராக இருக்கவும் மாநில தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது.