ஏஐசிடிஇ எச்சரிக்கை
சென்னை, அக்.28- ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்கு காட்டும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்ப டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூலம் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற வேண்டும். ஏஐசிடிஇ வழிகாட்டுதலை முறையாக பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த அனு மதி வழங்கப்படும். அவ்வாறு வழிகாட்டு தலை பொறியியல் கல்லூரிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக குழு ஆய்வு செய்த பின்னரே, பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தும் வழங்கப்படும். அதன் பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.
ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி, வகுப் பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் என்பன உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றிருப்பதோடு 15 மாணவர்க ளுக்கு ஒரு பேராசிரியர் (1:15) என்ற அள வில் ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு தரப்பினரின் கோரிக்கை மற்றும் தகுதியுள்ள பேராசிரியர் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர் -மாணவர் விகிதாச்சாரத்தை 1:15 என்ற அளவிலிருந்து 1:20 (20 மாணவர்க ளுக்கு ஒரு பேராசிரியர்) என்ற அளவில் குறைத்தது. ஆனால், அதன் பிறகும் பல பொறியியல் கல்லூரிகள் இந்த ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை முறையாகப் பின்பற்றவில்லை என புகார்கள் எழுந்தன.
மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக, பேராசிரியர்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பு வதையும், பேராசிரியர்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை குறைக்கும் நடவடிக்கையை யும் பொறியியல் கல்லூரிகள் எடுத்து வரு கின்றன. மேலும், மாணவர் சேர்க்கை அனு மதியின்போது, ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணி புரிவதுபோல கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகின்றன. இதனால், பொறியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழக அதிகாரிகள் திடீர்ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கல்வியாளர்கள் தொடர்ந்து வைத்தனர். ஆனால், பல்கலைக்கழகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஏஐசிடிஇ இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பல்க லைக் கழக துணைவேந்தர்கள் தொழில் நுட்ப கல்வி இயக்குநர் ஆகியோருக்கு விடுத்துள் ளது.