tamilnadu

img

தொழிலாளர் சங்க தலைவர்களில் ஒருவருமான தோழர் கே.சமபத் படத்திறப்பு நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புஷ்பாநகர் கிளை உறுப்பினரும், சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர்களில் ஒருவருமான தோழர் கே.சமபத் படத்திறப்பு நிகழ்வு சனிக்கிழமையன்று (நவ.9) புஷ்பாநகரில் நடைபெற்றது. கட்டுமான சங்க ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் இ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உருவப்படத்தை சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் திறந்து வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், பகுதிச் செயலாளர் அ.இரணியன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் எம்.பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.