இந்த மாநாட்டில் மொழிப் போர் தியாகி சின்னச்சாமி யின் ஜோதியை நம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் வைத்தாகி விட்டது. அந்த தீ தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவைக் காக்க நம் ஒவ்வொருவரின் உணர்வையும் தூண்டப் போகிறது. 484 பக்க அறிக்கை கொண்ட இந்த கல்விக்கொள்கையில் எந்த சரக்கும் இல்லை. 40 ஆயிரம் கல்லூரிகளில் 50 சதவீத மான கல்லூரிகளை பாஜக அரசு மூடப் போகிறது. மூடப்படும் இந்த கல்லூரிகள் உத்தரபிரதேசத்தில் உள்ளதா? மத்தியப் பிரதேசத்தில் உள்ளதா? இல்லை. பெரும்பாலான கல்லூரி கள் தமிழகத்தில் தான் உள்ளன. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்தி மொழியை வளர்க்க நிதி ஒதுக்குகிறார். இந்தி மொழியை ஏன் வளர்க்கிறார்கள் என்றால் அடுத்து சமஸ்கிருதத்தை திணிப்பதற்கா கத்தான். அணுவும், மூலக்கூறுகளையும் வேதகாலத்தில் கண்டறிந்ததாக கதைவிடு கிறார்கள். புதிய தேசிய கல்விக்கொள்கையால் தமிழகத்திற்கு ஒரு சதவீதம் கூட பயன் இல்லை.
-ஈஸ்வரன், மதிமுக